ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தோனியின் வியூகம் எடுபடுமா?..ரசிகர்களுக்கு எழும்பும் சந்தேகம்
சிஎஸ்கே கேப்டன் தோனியின் வகுத்துள்ள வியூகம், இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு எடுபடுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில் அதன் மீதான எதிர்பார்ப்புகளும் பெருமளவில் கூடியுள்ளது. குறிப்பாக நடப்புச் சாம்பியனான சிஎஸ்கே அணி, எந்தெந்த வீரர்களை குறிவைக்கப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோரை தக்கவைத்துவிட்டு, மீதமிருந்த அனைத்து முக்கிய வீரர்களையும் கழட்டிவிட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலானோரை தற்போது மற்ற அணிகள் ஏலம் எடுக்கப்போட்டி போட்டு வருவதால், சிஎஸ்கே அணி வேறு வீரர்களை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.
சிஎஸ்கேவின் எதிர்காலத்தை மனதில் வைத்து தான் ஏலம் எடுக்கப்படும் என முன்கூட்டியே தோனி கூறியிருந்தார். அதன்படி அவரே நேரடியாக சென்னை வந்து திட்டம் போட்டுக்கொடுத்துள்ளார்.
சிஎஸ்கேவுக்கு இந்த முறை அதிகப்படியான இளம் வீரர்களை குறிவைத்து எடுப்பதே தோனியின் முக்கிய திட்டமாக உள்ளது.
அதன்படி இளம் வீரர்கள் ஷாருக்கான், மிக்யோ டார்ஜி, யாஷ் டல், அங்க்ரிஷ், ராஜ் பவா என குறைந்த அடிப்படை விலைக்கொண்ட வீரர்களை தோனி குறிவைத்துள்ளார். அவர்களுக்காக பெரும் தொகையை கேட்கவுள்ளதாக தெரிகிறது.
லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரின் திட்டமும் இதுவே ஆகும்.
ஆனால் கடந்த 14 வருடங்களாக சிஎஸ்கேவின் பலமாக இருப்பது சீனியர்களின் படை மட்டுமே.
"வயதானவர்களின் அணி" என்று அழைக்கப்பட்ட போதும், அனுபவம் கொண்ட வீரர்களின் உதவியுடன் தான் தோனி ஒவ்வொரு முறையும் ப்ளே ஆஃப் கொண்டு சென்றார்.
மேலும் 4 கோப்பைகளை வென்றுக்கொடுத்தார். ஆனால் சிஎஸ்கே வரலாற்றிலேயே புது முயற்சியாக தற்போது இளம் படையை களமிறக்க திட்டமிட்டுள்ளார். அதுவும் அவர் ஓய்வு பெரும்வேளையில் செய்துள்ளார்.
தோனி இதுவரை, அனுபவ வீரர்களை வைத்து போட்ட திட்டம் சரியாக நடந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக அவரின் திட்டங்கள் எடுபடவில்லை.
மற்ற அணிகளை அவர் சமாளித்தபோதும் ரிஷப் பண்ட் கேப்டன்சியில் இளம் படையான டெல்லி கேப்பிடல்ஸை சமாளிக்க தோனி பெரும் சிரமப்பட்டார்.
வரும் ஆண்டில் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் என இளம் வீரர்களின் கேப்டன்சியை அவர் சமாளிக்க வேண்டியுள்ளது.
இதனால் அவர் தற்போது எடுத்திருக்கும் முடிவும் சரியாக இருக்குமா? அல்லது ஏமாற்றமாக அமையபோகிறதா? என வல்லுநர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.