டெல்லியில் அஸ்வின் : டாஸ் வென்ற ஹைதராபாத் பேட்டிங்

ipl2021 batting sunrisers
By Irumporai Sep 22, 2021 01:52 PM GMT
Report

14-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.அந்த அணியில் கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாகக் களமிறங்குகின்றனர்.

டெல்லி அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், அன்ரிச் நோர்க்கியா, ககிசோ ரபாடா, ஷிம்ரோன் ஹெத்மயர் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாகக் களமிறங்குகின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.