என்னதான் ஆச்சு .. மீண்டும் சொதப்பல் பேட்டிங்க் சொதப்பிய ஹைதராபாத் : அதிர்ச்சியில் ரசிகர்கள்

IPL2021 OrangeArmy KKRvSRH
By Irumporai Oct 03, 2021 04:16 PM GMT
Report

துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

  அணியின் ஜேசன் ராய், விருத்திமான் சாகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாகா முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 10 ரன்னில் வெளியேறினார்.

கேன் வில்லியம்சன் 26 ரன்னில் ரன்அவுட் மூலம் வெளியேற, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தடுமாற ஆரம்பித்தது. அப்துல் சமாத் 2ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் அடிக்க, அந்த அணியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சவுத்தி, ஷிம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர் ஹைதராபாத் அணி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்த போட்டியில் ஹைதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்த ஐ.பி.எல். ரசிகர்களுக்கு ஹைதராபாத்தின் பேட்டிங் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.