ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இலங்கையின் வனிந்து ஹசரங்கா சேர்ப்பு
IPL 2021
RCB
Wanindu Hasaranga
By Thahir
கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19-ல் துவங்கி அக்டோபர் 15 வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாட இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஒப்பந்தமாகி உள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பாவுக்கு மாற்று வீரராக அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்.சி.பி தெரிவித்துள்ளது.
ஹசரங்கா சிறப்பாக சுழற்பந்து வீசக்கூடியவர். பேட்டிங்கிலும் லோயர் ஆர்டரில் அவர் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் மட்டும் அல்லது அந்த அணியில் மேலும் இரண்டு வீரர்கள் மாற்று வீரர்களாக இணைந்துள்ளதாக ஆர்.சி. பி தெரிவித்துள்ளது.