மிரட்டும் டெல்லி .. பரிதாப நிலையில் மும்பை IPL 2021
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் தொடரில் மும்பை அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுவிட்டால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடலாம்.
டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்க முனைப்புடன் உள்ளது. புள்ளிகள் பட்டியலில் மும்பை அணி 10 புள்ளிகளுடன் 6-ம் இடத்திலும் தில்லி அணி 16 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன.
கடந்த இரு ஐபிஎல் போட்டிகளிலும் மும்பைக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் தில்லி அணி தோல்வியடைந்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தில்லி அணியில் லலித் யாதவுக்குப் பதிலாக பிருத்வி ஷா இடம்பெற்றுள்ளார். மும்பை அணியில் ராகுல் சஹாருக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வரும் அவேஷ் கான், மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவை 7 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அஸ்வின் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார்.
6 ஓவர்களில் மும்பை அணி 1 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. 7-வது ஓவரில் டி காக்கின் விக்கெட்டை 19 ரன்களில் வீழ்த்தினார் அக்ஷர் படேல். அஸ்வினின் 2-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார் சூர்யகுமார்.
மும்பை அணி 10-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் 32, செளரப் திவாரி 7 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
டெல்லி அணி சூர்யகுமார் யாதவ் தவிர பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ள நிலையில், மும்பை அணியின் நட்சத்தர வீரர் பொல்லார்ட் நோர்ட்ஜே போல்டாகி வெளியேறினார். இதனால், மும்பை வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.