கடைசி வரை போராடிய கொல்கத்தா : மைதானத்திலேயே கண்ணீர் சிந்திய கோலி, வைரலாகும் புகைப்படம்!
நடப்பு ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கேப்டனாக வழிநடத்தும் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக அறிவித்திருந்தார் விராட் கோலி.
இந்த நிலையில், அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் இந்த முறை வென்று கொடுத்துவிட்டு அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விடைபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதை போலவே பெங்களூர் அணியின் செயல்பாடும் இருந்தது. புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது பெங்களூர். எலிமினேட்டரில் கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டி முடிந்ததும் கோலி கண் கலங்கிய காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அவருடன் டிவில்லியர்ஸும் கண் கலங்கியது கேமராவில் பதிவாகி உள்ளது. '
I tried so hard and got so far
— Raju Rathore (@RajuRat47709034) October 11, 2021
But in the end it doesn't even matter.Well played champ❣️#viratkholi pic.twitter.com/yYvuwX1V0M
ஐபிஎல்-லில் நான் விளையாடினால் அது பெங்களூர் அணிக்காக மட்டும் தான் இருக்கும்.இது என்றுமே மாறாது' என தோல்விக்கு பிறகு கோலி சொல்லி இருந்த நிலையில், கடைசி வரை வெற்றிக்காக போராடினார் விராட் கோலி.
ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் 'த்ரில்' வெற்றி பெற்றது.
you may like this video

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
