ஐபிஎல் 2வது குவாலிபயர் - மிரட்டிய கொல்கத்தா , திணறிய டெல்லி : கொல்கத்தா அணிக்கு மிக எளிய இலக்கு !

ipl2021 kkrvsdc
By Irumporai Oct 13, 2021 04:34 PM GMT
Report

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பிளே ஆப் சுற்றின் இரண்டாவது குவாலிபயர் ஆட்டம் இன்று ஷார்ஜாவில் நடக்கிறது. இதில் ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்-மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மார்கன், பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது

. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவேண்டும்

 இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இரண்டு அணிகளும் முனைப்பு காட்டின. நிதானமாக ஆடிய டெல்லி அணியை 135 ரன்களில் கட்டுப்படுத்தியது கொல்கத்தா.

துவக்க வீரர் பிருத்வி ஷா 18 ரன்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது விக்கெட் ஜோடி (ஷிகர் தவான்-ஸ்டாய்னிஸ்) சற்று தாக்குப்பிடித்து ஆடியது.

ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்டாய்னிஸ் 18 ரன்களும் சேர்த்தனர். ரிஷப் பண்ட் 6, ஹெட்மயர் 17 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் சேர்த்தார்.

டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்

மேலும், பெர்குஷன், ஷிவம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களத்தில் உள்ளது.