எல்லாம் முடிந்தது என் வேதனையினை வார்த்தைகளால் கூற முடியாது : ரிஷப் பண்ட் வேதனை !

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்தநிலையில், கொல்கத்தா அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்,

வார்த்தைகளால் எனது வேதனையை வெளிப்படுத்த முடியாது, ஆனால் போட்டி முடிந்தபிறகு பேசி பயன் இல்லை, நம்மால் இனி எதையும் மாற்ற முடியாது.

எங்களால் முடிந்தவரை போராடினோம். பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர். ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. கொல்கத்தா வீரர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர்.

குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களுக்கு பிறகு கொல்கத்தா அணி மிகசிறப்பாக பந்துவீசியது. இந்த தொடரில் தோல்வியடைந்திருந்தாலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நம்பிக்கையுடன் அடுத்த தொடரில் விளையாடும்' என தெரிவித்துள்ளார்.

You May Like This


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்