அதிரடி காட்டிய வெங்கடேஷ் ,திரிபாதி : கெத்தாக மூன்றாவது முறையாக ஐபிஎல் ஃபைனலுக்கு நுழைந்தது கேகேஆர்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதல் குவாலிபயர் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று நடைபெற்றது.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக தவான் 36 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 30ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், முதல் ஓவரில் இருந்தே டெல்லி அணியின் பந்துவீச்சை ஈசியாக எதிர்கொண்டு ஆதிக்கம் செலுத்தினர்.

கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான வெங்கடேஷ் ஐயர் 55 ரன்களிலும், சுப்மன் கில் 46 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் வந்த நிதிஷ் ராணா (13), தினேஷ் கார்த்திக் (0) போன்ற வீரர்கள் சொதப்பினாலும், இலக்கு மிக எளிது என்பதால் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 15ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்