போடு தகிட தகிட..கடைசி இரு லீக் போட்டிகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் - பிசிசிஐ
Cricket
IPL 2021
MI
SRH
DC
By Thahir
4 years ago

Thahir
in கிரிக்கெட்
Report
Report this article
நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி இரு லீக் ஆட்டங்களும் ஒரே நேரத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், அக்டோபர் 10 ஆம் தேதி இரு ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தன.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் இருபோட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை ஹைதராபாத் இடையேயான போட்டியும், பெங்களூரு டெல்லி இடையேயான போட்டியும் மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் தொடங்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
பிற்பகலில் நடைபெறும் போட்டிகளின் போது தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே, போட்டி அட்டவணை மாற்றப்பட்டதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.