சென்னை - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்

MS Dhoni CSK IPL 2021 SRH Chennai Super Kings
By Thahir Sep 30, 2021 04:56 AM GMT
Report

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2021 இன் 44 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன.

அதன்படி,இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 10 போட்டிகளில் 8 இல் வென்றுள்ளது.

சென்னை - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல் | Ipl 2021 Cricket Csk Srh Ms Dhoni

தற்போது புள்ளிகள் அட்டவணையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.ஹைதராபாத் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஏனெனில்,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பத்து போட்டிகளில் எட்டில் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில்,ஹைதராபாத் அணியானது,சென்னையை வீழ்த்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, ப்ரியம் கார்க், கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்

பெஞ்ச்: முகமது நபி, டேவிட் வார்னர், கலீல் அகமது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி , ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

பெஞ்ச்: மிட்செல் சாண்ட்னர், ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ.