இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் பாலோவர்ஸ்களை தட்டித்துாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

MS Dhoni CSK IPL 2021 Chennai Super Kings
By Thahir Aug 22, 2021 10:31 AM GMT
Report

இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்ட முதல் ஐபிஎல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

நடப்பு ஆண்டில் இடையே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஐபிஎல் அணிகள் அனைத்திற்கும் சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட்டவற்றில் தனித்தனி ப்ரத்யேக கணக்குகள் உள்ளன.

இதில் அவ்வபோது அணி குறித்த தகவல்களை பகிர்வது வழக்கம். இதற்காக அந்தந்த அணி ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அணி கணக்குகளை தொடர்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் பாலோவர்ஸ்களை தட்டித்துாக்கிய  சென்னை சூப்பர் கிங்ஸ் | Ipl 2021 Chennai Super Kings Csk Ms Dhoni

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் அதாவது 80 மில்லியன் பாலோவர்களை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் அணிகளிலேயே அதிகமான பாலோவர்களை கொண்ட அணியாக சிஎஸ்கே உள்ளது. இரண்டாவதாக 75 லட்சம் பாலோவர்களுடன் மும்பை இந்தியன்ஸும், மூன்றாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் உள்ளது.