இனி பட்டன் போனிலும் பணம் அனுப்பலாம் - எப்படி தெரியுமா?
புதிய யுபிஐ பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய யுபிஐ
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாய்ஸ் பேஸ்டு எனப்படும் குரல் அடிப்படையிலான யுபிஐ பரிவர்த்தனை சேவையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்காக நிதி தொழில்நுட்ப நிறுவனமான நெட்நொர்க் பீப்புள் சர்வீசஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. என்.பி.எஸ்.டி., எனும் இந்நிறுவனம், மிஸ்கால்பே எனும் டிஜிட்டல் பேமென்ட் தளத்து டன் இணைந்து இந்த சேவையை வழங்கவுள்ளது.
ஐஒபி அறிவிப்பு
வங்கி வழங்கும் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் செய்ய வேண்டும். இதன்பின் உங்கள் மொபைல் போனுக்கு அழைப்பு வரும் அப்போது பரிவர்த்தனை மதிப்பையும், யு.பி.ஐ., பின் நம்பரையும் உள்ளிட வேண்டும்.

குரல் அடிப்படையிலோ, மொபைல் கீபேட் வாயிலாகவோ உள்ளிடலாம். இந்த சேவை, 12 இந்திய மொழிகளில் வழங்கப்படும். இணையதள இணைப்பு தேவையில்லை.
ஆப்லைன் பரிவர்த்தனை என்பதால் மோசடிக்கான வாய்ப்பு மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.