பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கு இவர் தான் காரணம் : இன்சமாம் கடும் விமர்சனம்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதற்கான காரணம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 24) நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்து இரண்டு நாட்கள் நிறைவடைந்துவிட்டாலும், அதுகுறித்தான விவாதங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டதே இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவை ஆடும் லெவனில் இணைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளதால் அவர்களது ஆடும் லெவனில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு அப்படி நெருக்கடி ஏதும் இல்லை. மேலும் ஹர்திக் பாண்டியாவால் பந்துவீச முடியாவிட்டால் அவரது இடத்தில் வேறு ஒருவரை சேர்ப்பதே இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.