டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான்: அடித்து சொல்லும் பாகிஸ்தான் பிரபலம்
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி தான் வெல்லும் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதற்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என ஆவலுடன் காதிருக்கும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறித்து தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் பாகிஸ்தான் வீரரான இன்சமாம் உல் ஹக் இந்திய அணி நடப்பு டி20 உலக்கோப்பையின் சாம்பியன் பட்டம் வெல்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.எந்த தொடரிலுமே எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிப்பது கடினம்.
ஆனால் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கூறமுடியும். அந்தவகையில், இந்த டி20 உலக கோப்பையை பொறுத்தமட்டில், இந்திய அணிக்குத்தான் கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளது. மேலும் இந்தியா பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி பெற்றது. அதனால் தான் சொல்கிறேன். இந்திய அணி தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil

Puzzle IQ Test: படத்தில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-12 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
