சித்ராவின் தற்கொலைக்கு விரைவில் முடிவு! அவசர அவசரமாக சித்ராவின் நகம் மற்றும் மொபைல் ஆய்வு!

mobile serial cine
By Jon Feb 10, 2021 01:44 AM GMT
Report

சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வந்த சித்ரா தனியார் விடுதியில் டிசம்பர் 9ம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பலரும் கூறி வந்தனர். இதனால் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் டிசம்பர் 14ம் தேதி ஹேமந்த் மற்றும் சித்ரா இருவருக்கும் தகராறு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், ஹேமந்த் சித்ராவின் தற்கொலைக்கு எந்தவிதத்திலும் எனக்கு சம்மந்தம் இல்லை எனக் கூறி ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது அதேபோல் வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, 13 சாட்சிகளை மீண்டும் மீண்டும் துருவித்துருவி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என்றும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் உறுதியானது.

  சித்ராவின் தற்கொலைக்கு விரைவில் முடிவு! அவசர அவசரமாக சித்ராவின் நகம் மற்றும் மொபைல் ஆய்வு! | Investigation Chithra Murder Police Report Nail

இந்நிலையில் தற்போது அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. ஆனால் சித்ராவின் நகங்கள் மற்றும் சித்ராவின் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் தடவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பிலிருந்து வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த வழக்கை பிப்ரவரி 11ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் சித்ராவின் நகம் மற்றும் தொலைபேசி உரையாடல் அனைத்தின் முடிவுகளும் பிப்ரவரி 10ம் தேதி வந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே வரும் 11ம் தேதி சித்ராவின் தற்கொலைக்கு ஒரு முடிவு வந்துவிடும் என பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.