இணையத்தில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம்; மணப்பாறையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
இணையத்தில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றியது தொடர்பாக மணப்பாறையில் டெல்லி அயலக சிபிஐ பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் - சிபிஐ அதிகாரிகள் விசாரணை
இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் இணையத்தில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்தும் அவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கைளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பூமாலைபட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் டெல்லி அயலக பிரிவு சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர் எந்தெந்த தளத்தில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிபிஐ அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், குழந்தைகளின் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறார்.
ராஜா 10 ஆண்டுகளாக லண்டனில் பணியாற்றி வந்ததும் அவர் தற்போது திருப்பூரில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.
ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.