18 வயதுக்கு கீழ் உள்ள இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா - உச்சநீதிமன்றம்!
18 வயதுக்கு கீழ் உள்ள இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா என உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
மைனர் திருமணம்
18 வயது நிரம்பாத போதிலும் பருவமடைந்த இஸ்லாமிய பெண்கள் (சிறுமிகள்) தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு முந்தைய தீர்ப்புகள் பலவற்றையும் மற்றும் இஸ்லாமிய திருமணத்துக்கான இலக்கணங்களையும் ஆராய்ந்து அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
செல்லுமா?
இதை எதிர்த்து தேசிய குழந்தைகள் நலப் பாதுகாப்பு ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு
இஸ்லாமிய மைனர் பெண்களின் திருமணம் செல்லுமா என விசாரணை நடத்தப்படும் என்றது. மேலும் பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ள இஸ்லாமிய சிறுமிகளின் திருமணம் செல்லுமா என உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது