இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு.. அச்சத்தில் மருத்துவர்கள்.!

covid19 health ministry doctor
By Jon Mar 26, 2021 02:05 PM GMT
Report

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 12 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், 27 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரழந்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டாம், மூன்றாம் அலை பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினம்தோறும் 40,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பிரிட்டன், பிரேசில் மற்றும் ஆப்பிரிக்காவில் உருவான கொரோனா வகை வைரஸால் கொரோனா தீவிரமாக பரவுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை பரிசோதித்து தனிமைபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் தற்போது வரை 400-க்கும் மேற்பட்டவர்களிடம் பிரிட்டன் வகை கொரோனா பாதித்திருப்பது கண்டறியப்பட்டிருந்தது. இதனை இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தொடர்ந்து கண்கானித்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. அதில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்த வந்த கொரோனா வகைகள் அல்லாமல் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் பாதிப்பின் தீவிரம் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.