அறிமுகமாகிறது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ XUV700 - N மாடல்..புதிய வசதிகள் என்ன?
மஹிந்திரா நிறுவனம் அதன் ஸ்கார்பியோ காரால் அடைந்த வெற்றியை அடுத்து அதில் புதிய N மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முந்தய மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளசிக் என்ற பேரில் இனி விற்பனை செய்யப்படும் என் அன்நிறுவனம் அறிவித்துள்ளது.
டிசைன் மற்றும் என்ஜின்
XUV 700 போன்ற முன்பக்கத் தோற்றம் கொண்டுள்ளது. இதில் உள்ள லோகோ மற்றும் முன் பக்க க்ரில் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
LED ப்ரொஜெக்டர்,ஹெட் லேம்ப் ஆகியவற்றில் புதிய டிசைன் கொண்டுவந்துள்ளனர். இதில் 2.0 லிட்டர் m Stallion டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் பயண்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உட்புறத்தில் உள்ள வசதிகள்
இதில் கிரோம் பினிஷ் கொண்ட 20.3 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இதில் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல், பிளாட் பாட்டம் ஸ்டைரிங் வீல், எலக்ட்ரிக் சன்ரூப் போன்று பல வசதிகள் உள்ளன.
அமேசான் அலெக்ஸா வாய்ஸ் சப்போர்ட், ரியர் கேமரா ஆகிய வசதிகளும் இதில் உள்ளது. இந்த வாகனத்தில் 6 மற்றும் 7 சீட்டர் என இரு விருப்பங்களுக்கு ஏற்பக் கிடைக்கிறது. இதில் 6 ஏர் பேக்குகள், வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற வசதிகளும் உள்ளன.
விலை விவரம்
இந்த புதிய மாடல் பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் தற்போது விற்பனையில் களமிறங்கியுள்ளது. இதன் விலை 11.99 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
இதன் வீல் டிரைவ் மாடலின் விலை பட்டியல் வரும் ஜூலை 21 தேதி அறிவிக்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் டாப் மாடல் 19.49 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும். முதற்கட்டமாக 25 ஆயிரம் பதிவுகள் மட்டுமே ஏற்கப்படும் என்றும், இதன் மேனுவல் வேரியண்ட் மட்டுமே இப்பொது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் தற்போது 5 வேரியண்டுகள் சந்தைக்கு வந்துள்ளது.