முன்களப் பணியாளர்களுக்கு 3 வண்ணங்களில் பாஸ் அறிமுகம்: எங்கு தெரியுமா?

covid19 mumbai pass3colors
By Irumporai Apr 18, 2021 10:52 AM GMT
Report

மும்பையில முன் களப்பணியாளர்கள் வெளியில் பயணிக்க சிவப்பு பச்சை மஞ்சள் நிறங்களில் பாஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

   மும்பையில் கொரோனா தொற்று வேகமகா பரவி வரும் நிலையில் தொற்றினை குறைக்க போலீசார் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.

அதன்படி, தனியார் வாகனங்களுக்கு மூன்று வண்ண குறியீடுகளின் ஸ்டிக்கர்களைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் இயக்க முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது போக்குவரத்து நெரிசல் பிரச்சினை காரணமாக மும்பை காவல்துறை இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.

சிவப்பு ,பச்சை, மஞ்சள் வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே மும்பையில் அனுமதிக்கப்படும்.

இந்த மூன்று வண்ணக் குறியீடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும். இந்த வண்ணக் குறியீடுகள் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அதன் படி மஞ்சள் வண்ண குறியீட்டையும், மருத்துவ சேவைகளை வழங்கும் வாகனங்களில் சிவப்பு வண்ண குறியீட்டையும், காய்கறி வாகனங்களுக்கு பச்சை வண்ண குறியீட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

வண்ணக் குறியீட்டை தவறாகப் பயன்படுத்தினால், பிரிவு 419 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.