இனி ATM-ல் தங்கம் வரும்..வியந்து பார்த்த மக்கள் - அசர வைத்த நிறுவனம்..!

ATM Hyderabad GoldATM தங்கம் ஏடிஏம்தங்கம் தங்கஏடிஎம்
By Thahir Mar 22, 2022 03:18 PM GMT
Report

ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கும் வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு்ளளது.

தங்கம் பொதுவாக பெண்களின் பிரியமான பொருட்களில் ஒன்று.அதுவும் காலத்திற்கு ஏற்ப புது புது மாடல்களில் தங்க நகைகளை வாங்க வேண்டும் என்பது அவர்களின் அலப்பறியா ஆசை.

பொதுவாக தங்கம் வாங்க வேண்டும் என்றால் நகை கடைகளில் ஏறி இறங்கி நீண்ட நேரம் காத்திருந்து தங்கத்தை வாங்க படாதபாடு படக்கூடிய நிலையில் ஏடிஎம்-ல் பணத்திற்கு பதிலாக தங்கம் வாங்கும் வசதி ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இனி ATM-ல் தங்கம் வரும்..வியந்து பார்த்த மக்கள் - அசர வைத்த நிறுவனம்..! | Introduce Gold Atm Hyderabad

கோல்ட் சிக்கா லிமிட்டெட் நிறுவனம் தொடங்கியுள்ள இந்த ஏடிஎம்-ல் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்யலாம்.

வங்கி ஏடிஎம் கார்டு,கிரெடிட் கார்டு மூலமாக இந்த மெஷினில் தங்கத்தை வாங்க முடியும். நிறுவனம் தரப்பிலிருந்து தங்கத்தை வாங்க பிரீ பெய்டு,போஸ்ட் பெய்டு கார்டுகள் வழங்கப்படுகின்றன.

தங்கத்தை விநியோகிக்கும் ஏடிஎம் சேவைக்காக இந்த நிறுவனம் சென்னையைச் சேர்ந்த ட்ரூனிக்ஸ் டேட்டாவேர் எல்.எல்.பி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் தங்கத்திற்கான ஏடிஎம் தொடங்குவது இதுவே முதல்முறையாகும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 3000 தங்க ஏடிஎம்களை நிறுவ இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.