போதையில் மனைவி குறித்து தவறாக பேசிய நபரை அடித்தே கொன்ற அதிர்ச்சி சம்பவம்
குன்றத்தூரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து ஒருவர் அடித்து கொலை.
குன்றத்தூர், மேத்தா நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்(33), ஒண்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன்(36), இருவரும் மது அருந்தும் போது பழக்கம் ஏற்பட்டு தினமும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியில் உள்ள காலி இடத்தில் ஒன்றாக அமர்ந்து இருவரும் மது அருந்தி கொண்டிருந்த போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்ட நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன் கல்லால் அடித்ததில் ரத்த காயத்தால் தியாகராஜ மயங்கி vஇழுந்தார்.
கீழே விழுந்தவரை அங்கேயே விட்டுவிட்டு கண்ணன் சென்று விட்டார். இதையடுத்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மயங்கி கிடந்த தியாகராஜனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை செய்தபோது,
குடிபோதையில் தனது மனைவி குறித்து தவறாக பேசியதால் அடித்து, உதைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கண்ணனிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.