அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல்
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவிரும்புவோர் கடந்த 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
விருப்ப மனு தாக்கல் செய்ய மார்ச் 3 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நேர்காணல் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அன்று மாவட்ட வாரியாக, நேரம் ஒதுக்கப்பட்டு ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களுக்கான நேர்காணலும் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய கால அவகாசம் இல்லாததால் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிட இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.