கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

kodanadcase ExMLAArukutty interrogationends admkparty murder&robbery
By Swetha Subash Apr 15, 2022 01:27 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு | Interrogation With Ex Admk Mla Arukutty Ends

காவலர் பயிற்சி மையத்துக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கோடநாடு கொள்ளை கொலை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

ஓட்டுநர் கனகராஜ் தன்னிடம் வேலை பார்த்ததால் கொடநாடு வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர் என்றும் போலிசாரின் விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது என்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளேன் என்றும் ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.