13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; இண்டர்போல் உதவி - குற்றவாளியை பிடிப்பதில் தாமதம்
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளியை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் திடீரென 13 தனியார்ப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசாரும் வெடிகுண்டு வல்லுநர்களும் விரைந்து வந்து பள்ளிகளில் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
மேலும், பள்ளிகளுக்கு வந்த மெயிலை பார்த்த போது அனைத்து இமெயிலும் ஒரே ஐடியில் இருந்து வந்ததும் ஒரே போன்ற தகவல்கள் இருந்தது. அதையடுத்து அந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இண்டர்போல் உதவி
ஒரே மெயில் ஐடியில் இருந்து பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அந்த ஐபி முகவரியைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மிரட்டல் விடுக்க வெளிநாடுகளில் உள்ள தனியார் இணையதள சேவையைப் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்பின், சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போலை நாட போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.