வீடுதோறும் மாதம் ரூ.200க்கு இணைய சேவை - அமைச்சர் அறிவிப்பு

Tamil nadu DMK Palanivel Thiagarajan
By Sumathi Apr 25, 2025 12:33 PM GMT
Report

இணைய சேவை குறித்த முக்கிய தகவலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

இணைய சேவை

தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

வீடுதோறும் மாதம் ரூ.200க்கு இணைய சேவை - அமைச்சர் அறிவிப்பு | Internet Service For Homes Announce Tn Govt

அப்போது அவர் பேசுகையில், வீடுகளுக்கு கேபிள் டிவி சேவைபோல, 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும்.

நள்ளிரவில் துணைவேந்தர்களை வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர் - ஆளுநர் பகீர் புகார்

நள்ளிரவில் துணைவேந்தர்களை வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளனர் - ஆளுநர் பகீர் புகார்

அமைச்சர் அறிவிப்பு

இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதற்படியாக இதுவரை ஏற்கனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதிகொடுக்கப்பட்டுள்ளது.

palanivel thiagarajan

4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.