சர்வதேச சதி வழக்கில் 21 வயது செய்ற்பாட்டாளரை கைது செய்த டெல்லி போலீஸ்
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சர்வதேச அளவில் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். டெல்லி போலீஸ் இதன் பின்னர் சதி இருப்பதாக வழக்கு பதிவு செய்திருந்தது.
க்ரேட்டா துன்பர்க் ட்விட்டரில் பகிர்ந்திருந்த டூல் கிட் ஒன்றை பயன்படுத்தி சர்வதேசசதித்திட்டம் தீட்ட முயற்சி நடப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தற்போது டெல்லி போலீஸ் பெங்களூருவைச் சேர்ந்த 21 வயது சூழலியல் செயற்பாட்டாளரான திஷா ரவியை கைது செய்துள்ளது. க்ரேட்டா துன்பர்க் பகிர்ந்திருந்த டூல் கிட்டை இவரும் பகிர்ந்திருந்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.