அங்கீகாரம் ரத்ததாகும் : இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சர்வதேச மல்யுத்த சம்மேளனம்

By Irumporai May 31, 2023 02:45 AM GMT
Report

சர்வதேச அங்கீகாரம் ரத்ததாகும் என இந்திய மல்யுத்த சம்மேளனதிற்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் புகார்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள், மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து அவரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர்.

புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்ததாக தங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதனை கைவிட்டனர். இப்படி பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை மல்யுத்த வீராங்கனைகள் வெளிப்படுத்தி வருகின்றனர் .

எச்சரிக்கை கொடுத்த சம்மேளனம்  

இந்நிலையில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டம் குறித்து சர்வதேச மல்யுத்த சம்மேளனம் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில் இந்திய மல்யுத்த சம்மேளத்திற்கு தங்கள் கண்டனம் மற்றும் அதிர்ப்தியை அதில் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், பதக்கங்களை ஆற்றில் விடும் முடிவுக்கு வீரர் வீராங்கனைகள் சென்றது குறித்து தங்களது அதிர்ப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

அங்கீகாரம் ரத்ததாகும் : இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சர்வதேச மல்யுத்த சம்மேளனம் | International Wrestling Feissued A Warning

மேலும், தாங்கள் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் போராட்டங்கள் குறித்து ஆரம்பம் முதலில் கவனித்து வருவதாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டியை டெல்லியை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து பரீசலித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அடுத்த 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் இந்திய மல்யுத்த சம்மேளத்தின் சர்வதேச அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

ஒருவேளை சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அங்கீகாரத்தை ரத்து செய்தால் இந்திய தேசிய கொடியுடன் மல்யுத்த வீரர் – வீராங்கனைகள் வெளிநாட்டில் நடக்கும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது