ஓ சொல்றியா மாமா.. பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அசர வைத்த மதுரை பெண் காவலர்கள்..!
நேற்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மதுரை மாநகர காவல்துறையில் பணி புரியும் பெண் காவலர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.
நேற்று உலக மகளிர் தினத்தையொட்டி மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி மகளிர் தினத்தை கொண்டாட முடிவு செய்தனர்.
இதையடுத்து மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் ஒன்று சேர்ந்த மதுரை மாநகர காவலதுறையில் பணிபுரியும் பெண் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள்,முதுநிலை காவலர்கள்,காவலர்கள் அனைவரும் மகளிர் தினத்தை சேர்ந்து கொண்டாடினர்.
மேடையில் சில பெண் போலீசார் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு உற்சாக நடமாடினர். இதை மேடையின் கீழ் இருந்து பார்த்த சக பெண் காவலர்களும் உணர்ச்சி பொங்கும் உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டனர்.
பெண் காவலர்கள் காக்கி உடையில் விரைப்பாக நின்று சல்யூட் அடித்து
பழகிய இவர்களுக்கு இந்த மகளிர் தினம் ஒரு புத்துணர்வு கொடுத்ததாக, மகிழ்ச்சி பொங்க
தெரிவித்தனர்.