நச்.. என்று! இச்... ஒன்று! - இது முத்த டே ஸ்பெஷல்!

Viral Photos
By Sumathi Jul 06, 2022 07:04 AM GMT
Report

அன்பு, காதல், பரிவு, காமம் போன்றவற்றை வெளிப்ப்படுத்தும் ஒரு வடிவம் முத்தம். ஜூலை 6-ம் தேதியான இன்று ‘சர்வதேச முத்த தினம்’ கொண்டாடப்படுகிறது.

kiss

பள்ளிக்கு செல்லும் முன்பு சாலையில் நின்று பெற்றோர்களுக்கு கொடுக்கும் முத்தத்தில் தொடங்கி, காதலை வெளிப்படுத்தும் நொடியில் பரிமாற்றிக்கொள்ளும் முத்தம் வரை எல்லா முத்தங்களாலும் ஏற்படும் நன்மைகள் பற்றி பேசிக்கொண்டே இருக்க பல தகவல்கள் உள்ளன.

முத்தம் பற்றிய ஆராய்ச்சி தகவல்கள் குறித்தும், பல வகை முத்தங்களின் அர்த்தங்கள் குறித்தும் இக்கட்டுரையின் வழியாக தெரிந்த்துக்கொள்வோம் வாருங்கள்.

 அன்பின் வெளிப்பாடு

அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா போன்றோர் உங்கள் கன்னத்திலோ, நெத்தியிலோ முத்தம் தந்து அவர்களது அன்பை வெளிப்படுத்துவதும், நீங்கள் அந்த முத்தக்கடனை அடைப்பதும் இயல்பாக ஒரு குடும்பத்தில் அன்பு பரிமாறிக்கொள்ளபடும் முறை தான்.

நச்.. என்று! இச்... ஒன்று! - இது முத்த டே ஸ்பெஷல்! | International Kiss Day Special

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் முன் பின் தெரியாதவர்களிடத்திலும் அன்பை வெளிப்படுத்தும் கருவியாக முத்தம் கருதப்படுகிறது. சாலையின் நடுவில் யாரென்றே தெரியாத ஒருவரிடம் கூட வரவேற்கும் விதமாக, நட்பை வெளிப்படுத்துவதற்காக,

மரியாதை கொடுப்பதற்காக முத்ததை பரிமாறிக்கொள்வர். சில நாடுகளில் ஒரு நாளில் இரண்டு முறை முத்தம் கொடுப்பது வழக்கம். பிரான்ஸ் நாட்டில் ஒரு நாளில் மூன்று முறை முத்தம் கொடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது.

நச்.. என்று! இச்... ஒன்று! - இது முத்த டே ஸ்பெஷல்! | International Kiss Day Special

இப்படி முத்தம் கொடுப்பதற்கு அவர்கள் கலாச்சாரத்தில் ஏன் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அதற்கு முத்ததால் கிடைக்கும் நன்மைகள் தான் காரண்ம். அன்பின் வெளிப்பாடான முத்தம் என்னவெல்லம் செய்யும் தெரியுமா?

மருத்துவ நலன்கள்

ஒரு முறை முத்தம் தருவதால் உங்கள் உடலில் 12 கலோரிகள் எரிக்கப்படுகிறது. ஒவ்வொருமுறை நீங்கள் முத்தம் கொடுக்க முயற்சிக்கும்போது உதடுகள் அருகிலிருக்கும் 2 தசைகள், முகத்திலிருக்கும் 12 தசைகள் வேலை செய்கின்றன.

நச்.. என்று! இச்... ஒன்று! - இது முத்த டே ஸ்பெஷல்! | International Kiss Day Special

ஆழமான பகுதிகளில் முத்தத்தில் 34 தசைகள் தூண்டப்படுகின்றன. இதனால் முகத்தில் உள்ள தசைகள் ஆரோக்கியமடைந்து உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும் என்று ஆராய்சிகள் கூறுகின்றன.

முத்தம் பரிமாறிக்கொள்ளும் போது இரத்த நாளங்கள் விரிந்த்து கொடுக்கும், அதனால் இதயத்துடிப்பு 58% அதிகரிக்கும்.

 முத்தம் ஏற்படுத்தும் மாற்றம்

10 விநாடிகளுக்கு பரிமாறிக்கொள்ளும் முத்தத்தினால் 9 மி.லி. உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகின்றது. அந்த உமிழ்நீரில் புரதம் - 0.7 மி.கிராம், கொழுப்பு - 0.71 மி.கிராம், உப்பு - 0.45 மி.கிராம், நீர் - 60 மி.கிராம் இருப்பதாக கூறப்ப்படுகின்றது.

முத்தம் பரிமாறப்படும் போது உணர்ச்சிகளுக்கு காரணமான அட்ரினலின் (adrenaline) ஹார்மோன், மகிழ்ச்சிக்கு காரணமான செரோட்டோனின் (serotonin), ஆக்ஸிடோசின் (oxytocin) ஹார்மோன் ஆகியவை அதிகரிக்கும்.

கோபம், உடல் பருமன், ஆகியவற்றை ஏற்படுத்தும் கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன் சுரப்பது குறையும். நீங்கள் பகிர்ந்துக்கொள்ளும் முத்தத்திற்கு நிகராக முதுமையால் ஏற்படும் முசுருக்கங்கள் குறையும். முத்தமிட்டே இளமையை தக்க வைத்துக்கொள்ளலாம், முயற்சித்து பாருங்கள்.

 முத்தம் பற்றி  தெரியாதவை

66% பேர் முத்தமிடுகையில் கண்களை இறுக மூடிக்கொள்வார்களாம். மீதம் உள்ளவர்கள் கண்களை திறந்து அவர்களது துணைவரை பார்த்தபடியே முத்தமிடுகின்றனர்.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 306 மணி நேரம் முத்ததிற்காக செலவிடுகிறான். உதடுகளில் உள்ள உணர்திறன் நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது.

முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கும் தன்மைக்கொண்டது. அதே நேரம் ஆண்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டுக் கொள்பவர்களின் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவில் செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறையும்.

முத்தம் குறித்த ஆராய்ச்சி

 முத்தமிடுதல் பற்றியும் முத்தம் பற்றியும் செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு பிலிம்டாலஜி (philemotology) என்று பெயர். அப்படி இத்துறையில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் 1 நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுத்தால் 26 கலோரிகள் வரை எரிக்கப்படுகின்றன என்றும்

உடல் பருமனாக இருப்பவர்கள் முத்தமிட்டே உடல் எடையை குறைக்களாம் என்றும் கூறப்படுகிறது. வலது பக்கம் சாய்ந்தப்படியே நாம் முத்தம் கொடுக்க காரணம் நமது மூளையில் உணர்ச்சியின் கட்டுப்பாடு வலப்பக்கம் இருப்பதே காரணமாகும்.

இந்தியாவில் வீட்டில் பார்த்து முடிக்கப்பட்டு திருமணம் செய்துக்கொண்டவர்கள் தான் காதல் திருமணம் செய்தவர்களை விட அதிகமாக முத்தமிட்டு கொள்வதாக ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

முத்தங்களின் அர்த்தம் தெரியுமா?

நெற்றி முத்தம்

உங்களின் உணர்வுகளையும், உங்களின் எண்ணங்களையும் மதிக்கிறார்கள் என்றும் அதிகபடியான அன்பை உங்களிடம் வெளிப்படுத்துகிறார்கள் என்றும் அர்த்தம் கொண்டதாகும்.

இந்த வகை முத்ததை பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் நீங்கள் பரிமாறிக்கொள்ளலாம்.

கன்னத்தில் முத்தம்

உலகெங்கிலும் பல நாடுகளில் வரவேற்பது தொடங்கி வணக்கம் வைப்பது வரை இந்த வகை முத்தமிடுதலை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர்.

நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், மற்றும் உடன் வேலை செய்பவர்கள் என யாருக்கும் தயக்கமின்றி இந்த வகை முத்ததை பரிமாறிக்கொள்ளலாம்.

கையில் தரப்படும் முத்தம்

உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் நன்றாக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள் என்ற அர்த்தம் இதற்கு உண்டு. உங்களின் ஆண் அல்லது பெண் நண்பர்களிடம் இதை நீங்கள் வெளிப்படுத்தலாம்.

சில நாடுகளில் மரியாதையுடன் ஒருவரை வரவேற்பதற்கும் இந்த வகை முத்தம் பயன்படுத்தப்படுகிறது.

உதட்டு முத்தம்

காதலை வெளிப்படுத்த இந்த வகை முத்தம் பயன்படுத்தப்படுகிறது.

காதலர்கள் மற்றும் கணவன் – மனைவியின் நெருக்கத்தினையும் அன்பினையும் வெளிப்படுத்தும் முத்தம் இது.

பிரன்ச்சு முத்தம்

இது ஒரு இணைக்கான நெருக்கத்தினை அதிகப்படுத்தும் முத்தமாகும்.

ஆசை, தேவை, நெருக்கம் ஆகியவற்றை தன் இணைக்கு தெரிவிப்பதற்காக இந்த முத்தத்தை பரிமாறிக்கொள்வர். இன்னும் பல வகை முத்தங்களும், முத்தம் பற்றிய தகவல்களும் அதிக அளவில் உள்ளன.

அவற்றுள் சிலவற்றை பற்றியும், அவைகள் குறித்த ஆராய்ச்சி தகவல்கள் பற்றியும் உங்களிடம் பகிர்ந்துள்ளோம். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இன்று சர்வதேச முத்த தின வாழ்த்தை மேல்கண்ட முத்தங்களோடு தெரிவியுங்கள். 

-வ. சபரிதா