Tuesday, Jul 22, 2025

சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகளை தட்டித்துாக்கிய ஜெய்பீம்

Festival International Film Jai Bhim 3 Award
By Thahir 3 years ago
Report

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது.

டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ஜெய்பீம்.

90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. நேரடியாக ஓடிடி-யில் வெளியான இந்த திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த படம் சில தினங்களுக்கு முன்பு ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழா 2022-இல் மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த படத்திற்காக ஒரு விருதும், சிறந்த நடிகருகான ஒரு விருதை நடிகர் சூர்யாவுக்கும், சிறந்த நடிகைக்கான ஒரு விருதை நடிகை லிஜிமோல் ஜோஸுக்கும் கிடைத்துள்ளது.

உலக அளவில் பேசப்படும் தமிழ் திரைப்படமான ஜெய்பீம் படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறனர்.