ஐசிசியின் நிதி-வணிக விவகார கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா நியமனம்...!

Cricket Indian Cricket Team International Cricket Council
By Nandhini Nov 12, 2022 12:57 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் வாரிய(பிசிசிஐ) செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)-இன் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பேசுகையில், 2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று ஜெய்ஷா தெரிவித்தார்.

ரமீஸ் ராஜா கண்டனம்

இதனையடுத்து, ஆசிய கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று ஜெய்ஷா பேச்சுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கண்டனம் தெரிவித்தார். மேலும், இவரின் பேச்சு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

international-cricket-council-jay-shah

ஜெய்ஷா நியமனம்

இந்நிலையில், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகார கவுன்சிலின் தலைவராக ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், அவருக்கு பின் தலைவராக ஜெய்ஷா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் அடுத்த கூட்டம் ஜெய்ஷா தலைமையில் மார்ச் 2023ல் நடைபெறும் என்று ஐசிசி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெறும் ஐசிசி வாரியக் கூட்டங்களில் கலந்துகொள்ள, ஜெய்ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் தலைமையிலான பிசிசிஐ குழு ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது.