87 ஆண்டு சாதனை முறியடிப்பு... பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்..!

James Anderson International Cricket Council
By Nandhini Feb 22, 2023 12:30 PM GMT
Report

இன்று வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

international-cricket-council-james-anderson-no-1

முதலிடம் பிடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

இன்று டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த தர வரிசைப் பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்திலும், பேட் கம்மின்ஸ் 3வது இடத்திலும் இந்திய வீரர் ஜடேஜா 9வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஜேம்ஸ் ஆண்டர்சனை ரசிகர்கள் வாழ்த்தி பாராட்டி வருகிறார்கள்.