விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை

Vijay Tamil nadu Chennai
By Thahir Aug 16, 2022 07:23 AM GMT
Report

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலி திரைப்படம் 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் புலி. இத்திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தில் ஹன்சிகா, நடிகையாக நடித்திருந்தார். படத்தினை செல்வகுமார் தயாரித்திருந்தார் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

உயர்நீதிமன்றம் இடைக்கால தடை 

இந்த நிலையில் 2016 - 17 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டுக்கான ஐ.டி. கணக்கில் ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ.1 .5 கோடி அபராதம் விதித்து 2022-ல் உத்தரவு பிறப்பித்தது வருமான வரித்துறை.

விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை | Interim Stay On Order Imposing Fine On Vijay

புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாக வருமான வரித்துறையினர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது.

வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீது இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் செப். 16க்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.