பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் இவர்தானா ? வெளியான பரபரப்பு தகவல்

pakistan kulsarahmed
By Irumporai Apr 04, 2022 12:33 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக குல்சார் அகமதுவை, இம்ரான்கான் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய பிரதமர் இம்ரான்கான்.

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவை பரிந்துரை செய்து அதிபர் ஆரிப் அல்விக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் பணி குல்சார் அகமது தலைமையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்தார்.

அதனடிப்படையில் அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அடுத்தடுத்து அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் தொடர்கிறார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒருபக்கம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

மறுபக்கம் பாகிஸ்தான் இடைக்கால பிரதமரை இம்ரான்கான் பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.