உதயநிதியுடன் காதல்.. சினிமாவில் ஆர்வம் - கிருத்திகா உதயநிதியின் ஸ்டேட்மெண்ட்!

Udhayanidhi Stalin Tamil Cinema Kiruthiga Udhayanidhi
By Sumathi Jan 06, 2023 07:30 PM GMT
Report

கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் மருமகளாகவும், இளம் அரசியல் வாதியும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா, தமிழில் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

கிருத்திகா

விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கியப்போதும் அந்தளவிற்கு ரீச் ஆகவில்லை. இதனையடுத்து தொடர்ந்து பல படங்களை இயக்கிய கிருத்திகா வெப்சீரிஸ், வைரமுத்துவின் புரோஜெட் போன்றவற்றில் பிஸியாக இருந்து வருகிறார்.

உதயநிதியுடன் காதல்.. சினிமாவில் ஆர்வம் - கிருத்திகா உதயநிதியின் ஸ்டேட்மெண்ட்! | Interesting Facts About Kiruthiga Udhayanidhi

உதயநிதி – கிருத்திகாவின் மகன் இன்பன் உதயநிதி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில், அவருக்கு பல்வேறு வழிகாட்டுதலை வழங்கிவருகிறார் கிருத்திகா. எனக்கு உதயநிதியை 17 வயதில் இருந்தே தெரியும்.

சினிமா

அப்போது இருந்தே எங்களுக்குள் ஏதாவது சண்டை என்றால் மகேஷ் தான் அதை சரி செய்து வைப்பார். நாங்கள் மூவருமே ஃப்ர்ண்ட்ஸா தான் வளர்ந்தோம். அப்போ நாங்க இருந்ததையும் இப்போ நாங்கள் ஒருவரும் இருக்கும் நிலையையும் என்னால் நம்பவே முடியவில்லை.

உதயநிதியுடன் காதல்.. சினிமாவில் ஆர்வம் - கிருத்திகா உதயநிதியின் ஸ்டேட்மெண்ட்! | Interesting Facts About Kiruthiga Udhayanidhi

நான் இயக்குநர் இதெல்லாம் நினைத்ததே இல்லை. உதய் அரசியல், சினிமா என்று பிஸியாக இருந்தாலும் எங்களுக்கான நேரத்தையும் மேனேஜ் செய்கிறார். என்னதான் அரசியல் பின்னணியில் இருந்து வந்தாலும் அவர் அடைந்துள்ள இடத்தை அடைவதற்கு நிறைய சவால்கள் இருந்தன.

அரசியல்

அவர் முதன்முதலில் சட்டசபையில் பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் எல்லோரும் வீட்டில் சும்மாவே இருப்பதே எங்களுக்கு சிறந்த நேரம். சும்மா இருக்கிறதைத் தான் ரொம்ப விரும்புகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திரைத்துறை, குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்க்கை என அனைத்திலும் பிஸியாக இருக்கும் இவருக்கு இதுவரை சமையில் வெறும் 5 டிஸ் மட்டும் தான் செய்யத்தெரியும் எனவும்,

இதனையும் அவர் ஏற்கனவே எழுதிவைத்துள்ள சமையல் குறிப்பு நோட்டில் இருந்து தான் பார்த்துச்செய்வேன் எனவும் கூறியுள்ளார். "காதலை வெளிப்படுத்த பயப்படாதீங்க" என இவர் குறிப்பிட்ட பதிவு வைரலாகி வருகிறது.