🔴LIVE பட்ஜெட் 2023: சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1% குறைக்க புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்

Smt Nirmala Sitharaman Government Of India Budget 2023
By Thahir Feb 01, 2023 06:21 AM GMT
Report

நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன்

உணவு பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு குறித்து இந்தியா அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது - நிர்மலா சீதாராமன்

நொடிந்து போகும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க தனி நிதி உருவாக்கப்படும்.

🔴LIVE பட்ஜெட் 2023: சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1% குறைக்க புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன் | Interest Free Loan To States Nirmala

பான் கார்டு இனி முக்கிய அரசுத்துறை கொள்கைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.

ரூ. 7,000 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இ- கோர்ட் எனப்படும் இணையதள நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

மாநிலங்களுக்கு கடன் வழங்க ரூ. 1.30 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்க ஒதுக்கீடு.

ரசாயன உர பயன்பாட்டை குறைக்க ரூ.10 ஆயிரம் கோடியில் கோவர்த்தன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

5 ஜி சேவை மேம்பாட்டிற்கு 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி காடுகளை பாதுகாக்கவும் அதன் அளவை அதிகரிக்கவும் புதிய திட்டம்.

100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அலையாத்தி காடுகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பயன்படுத்தலாம்.

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட ஊழியர்கள் பிரணாம் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு.

அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என அறிவிப்பு. 

திறன் மேம்பாட்டிற்காக நாடு முழுவதும் 30 இடங்களில் மையங்கள் அமைக்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள அரசு உதவி.

விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள 10 ஆயிரம் உயிர் உள்ளீட்டு வள மையங்கள் அமைக்கப்படும்.

அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான கடன் உறுதி திட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சிறு, குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1% குறைக்க புதிய திட்டம்.

வங்கிகள் சட்டம் மற்றும் ரிசர்வ் வங்கி சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன் 

அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிப்பு.

 7.5% வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

வரும் நிதியாண்டிலர் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்.

கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என அறிவிப்பு