சடலத்துடன் உடலுறவு - தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு!

Karnataka
By Sumathi Jun 01, 2023 07:43 AM GMT
Report

சடலத்துடன் உடலுறவு கொண்டவருக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சடலத்துடன் உடலுறவு

கர்நாடகா, துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜ்(22) என்ற நபர் இளம்பெண் ஒருவரை கொலை செய்து அந்த சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்த வழக்கில், ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும்,

சடலத்துடன் உடலுறவு - தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பரபர தீர்ப்பு! | Intercourse With A Dead Body Karnataka Court

பிணத்துடன் உடல் உறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கர்நாடக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் குற்றவாளியான ரங்கராஜனுக்கு கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் எனவும்,

நீதிமன்றம் தீர்ப்பு

பிணத்துடன் உடல் உறவு கொண்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்தும் நீதிபதிகள் வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது.

அதனால் இந்திய தண்டனை சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை குற்றமாக பொருந்தாது. 376வது கற்பழிப்பு பிரிவின் கீழ் அது தண்டனை உரிய குற்றம் ஆகாது. இதனால் இறந்துபோன ஒருவரின் உடலுடன் உறவு கொள்வது குற்றம் ஆகாது என்று குறிப்பிட்டுள்ளனர்.