உக்ரைன் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த ரஷ்ய வீரருக்கு அனுமதி வழங்கிய மனைவி

russian ukrainianwomen
By Irumporai Apr 13, 2022 05:50 AM GMT
Report

உக்ரைன் பெண்களை தாராளமாக கற்பழித்துக்கொள் என ரஷ்ய ராணுவ வீரர் மனைவி தெரிவித்ததுள்ளது, தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதலானது ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் அட்டூழியங்கள் சகித்துக்கொள்ள முடியாததாய் மாறியுள்ளது.

குறிப்பாக உக்ரைன் பெண்கள் மீது ரஷ்ய ராணுவ வீரர்கள் நடத்தி வரும் தாக்குதலும், பாலியல்வன்முறைகளும் அதிகரித்துள்ளது, இந்த மனித உரிமை மீறல்களை ரஷ்யா மறுத்து வருகிறது.

மேலும், உக்ரைனில் உள்ள குழந்தைகள் முன்பே அவர்களது தாயை ரஷ்ய ராணுவ வீரர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் அட்டூழியங்களும் அரேங்கேறியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் பெண்களை தாராளமாக கற்பழித்து கொள், நான் உனக்கு அனுமதி தருகிறேன் என ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிஅடைய வைத்துள்ளது.

அந்த வீடியோ பதிவில் உக்ரைனில் உள்ள பெண்களை கற்பழித்து கொள் ஆனால் என்னிடம் அதுபற்றி எதுவும் பேசக் கூடாது , உக்ரைன் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த அனுமதி தருகிறேன் .

ஆனால் மறக்காமல் நீ பாதுகாப்பு சாதனத்தை பயன்படுத்த  மறந்துவிடாதே என அந்த பெண் கூறி சிரிப்பது போல் அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது