50 ஓவர் கிரிக்கெட்டில் 280 ரன்கள் விளாசி சாதனைப் படைத்த மாணவன்
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் மாணவர் ஒருவர் 280 ரன்கள் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
சென்னையில் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி அளவிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி அமீர் மஹாலில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டம் ஒன்றில் லாலாஜி மெமோரியல் ஒமேகா சர்வதேச பள்ளி - சின்மயா வித்யாலயா பள்ளிகள் மோதியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாலாஜி மெமோரியல் ஒமேகா பள்ளி அணி 50 ஓவர்கள் முடிவில் 591 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபினவ் கண்ணன் மற்றும் ஸ்ரீனிக் ஆகியோர் இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்தனர்.
அபினவ் கண்ணன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 280 ரன்கள் குவித்த நிலையில் 42 பவுண்டரிகளை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.