கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு.. இனி TNPSC பணிகளில் முன்னுரிமை இல்லை!
கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி பணிகளில் முன்னுரிமை கிடையாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கலப்பு திருமணம்
டிஎன்பிஎஸ்சி அரசுப் பணியாளர் தேர்வில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கவுதம் சித்தார்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், " கடந்த மார்ச் மாதம் 7382 குரூப் 4 நிலை காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டது. இந்த அறிவிக்கையில், கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் அறிவிக்கப்பட வில்லை. இது சமூக நீதிக்கு எதிராக உள்ளது.
முன்னுரிமை?
எனவே, இந்த அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் பதிலளித்த தமிழக அரசு, "வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்படும் காலிப் பணியிடங்களில் மட்டுமே கலப்புத் திருமனம் செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி போன்ற பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வில்லை. இது, தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளில் ஒன்று" எனத் தெரிவித்தது. இதனை கேட்ட தலைமை நீதிபதி டி.ராஜா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.