குடியரசு தினத்தையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு

India's Republic Day
By Thahir Jan 23, 2023 02:25 AM GMT
Report

குடியரசு தினத்தை முன்னிட்டு தேச விரோத சக்திகளின் சதி செயலை முறியடிக்க, ஒரு வார காலமாக இந்தோ, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரோந்து பணி தீவிரம் 

வருகின்ற 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு, ரோந்து பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, ராணுவ வீரர்கள் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். வட இந்தியாவில் கடும் பனி சூழல் நிலவுகின்ற நிலையில், தொடர்ந்து வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Intensive surveillance at international borders

இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏழு நாட்களாக வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் அதிக எச்சரிக்கையுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு 

இதற்காக ஜனவரி 21-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை ஆபரேசன் அலெர்ட் என்ற பெயரிலான பாதுபாப்பு ரோந்து பணியானது இந்தோ பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் மேற்கொள்ளப்படுகிறது.

தேச விரோத சக்திகளின் சதி செயலை முறியடிப்பதற்காக இந்த பாதுகாப்பு, ரோந்து பயிற்சி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குஜராத்தின் கட்ச் பகுதியில் சர் கிரீக் முதல் ரான் பகுதி வரையிலும், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்திலும் இந்த பாதுகாப்பு பணியானது நடைபெறும்.

இதேபோன்று ரோந்து படகுகளில் வீரர்கள் நாட்டின் எல்லையை ஒட்டிய, கடல் பகுதியில் சுற்றி வருகின்றனர். இதன் மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.