கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை
கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA அதிகாரிகள் முகமது உசேன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்
கடந்த மாதம் 23ம் தேதி கோவை உக்கடத்தில் கார் வெடித்து சிதறியது இதில் காரில் வந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணையில் முபின் வீட்டிலிருந்து 76 கிலோ வேதிப்பொருட்களை போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க உத்தரவிட்டது.
வீட்டில் சோதனை
இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு யாரேனும் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சந்தேகிக்கப்படும் நபர்கள் இல்லத்தில் விசாரணையும், சோதனையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை உக்கடத்தில் முகம்மது உசேன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.