குழந்தைகளை குறிவைக்கும் தட்டம்மை! தடுப்பூசி குறித்து எச்சரிக்கும் சுகாதார அமைப்பு
பங்களாதேஷில், தட்டம்மை (Measles) நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இது மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்று நோயாகும். தட்டம்மை பாதிப்பால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், தட்டம்மை இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா-பங்களாதேஷில், எல்லை வழியாக மக்கள் நகர்வு அதிகம் இருப்பதால், தொற்று இந்தியாவிற்குள் நுழையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு 90% வரை தொற்று பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்டுகின்றது.

மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்தத் தொற்று தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. 34,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 14 வயதுக்குள் உள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி குறைவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நோய்க்கு எதிரான முக்கிய பாதுகாப்பு MMR தடுப்பூசி ஆகும். இரண்டு தவணைகளில் இந்த தடுப்பூசியை சரியாக செலுத்துவது அவசியம்.
பெற்றோரின் விழிப்புணர்வே இந்த அபாயத்தைத் தடுக்க மிக முக்கியமானதாகும். பங்களாதேஷில், வேகமாகப் பரவி வரும் தட்டம்மை நோய், இந்தியாவிற்கும் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
64 மாவட்டங்களில் 58 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.