ரஷ்யா உடனான வர்த்தக தொடர்பை துண்டித்தது இண்டெல் (Intel)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24-ந் தேதி முதல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் இரு தரப்பிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்த தாக்குதலால் பல்வேறு உலக நாடுகளும் ரஷ்யா உடனான வர்த்தக தொடர்பை துண்டித்துள்ளது.

அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில் ஆப்பிள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அங்கு தங்கள் விற்பனையை நிறுத்தியது.
இந்நிலையில் ரஷ்யா பல்வேறு பொருளாதார சிக்கலை சந்தித்து வரும நிலையில் அமெரிக்காவின் பிரபல கணிப்பொறி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் (INTEL) ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுடனான தனது வர்த்தக தொடர்புகளை நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இன்டெல்லும் தனது சேவையை நிறுத்தியுள்ளதால் தகவல் தொடர்பு வர்த்தகம் அந்நாட்டை பாதிப்புக்குள்ளாகும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.