இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் - கள்ளக்காதனுடன் பெண் ஓட்டம்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆர்.எச்.காலனியை சேர்ந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. 30 வயதான இளம்பெண்ணுக்கு 6 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த இளம் பெண் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தொடங்கியுள்ளார். அப்போது அவருக்கு புனேவை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கம் நாளடைவில் களளக்காதலாக மாறியுள்ளது. இளம்பெண் தன் கணவருக்கு தெரியாமல் இரவு,பகலாக போனில் அந்த வாலிபருடன் பேசி வந்துள்ளார்.
அந்த வாலிபர் இளம்பெண்ணை தனது ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார்.இதை கேட்டு இந்த இளம் பெண் 2 குழந்தைகளுடன் தனது புனேவுக்கு ஓட்டம் பிடித்தார்.
வீட்டிற்கு வந்த கணவன் வீட்டில் யாரும் இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். இதனிடையே குழந்தைகள் மற்றொரு நபர் செல்போன் மூலம் தனது தந்தையை தொடர்பு கொண்டு கதறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து புகாரின் பேரில் புனே சென்ற போலீசார் குழந்தைகளை மீட்டனர்.
கள்ளக்காதலன் தப்பி ஓடிய நிலையில் இளம்பெண் தான் கணவருடன் செல்ல மாட்டேன் குழந்தைகளை வேண்டுமானால் அழைத்து செல்லுங்கள் என கூறி உள்ளார்.
கல்நெஞ்சம் படைத்த தாய்க்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் பெண் மற்றும் குழந்தைகளை கடத்தி சென்ற நபர் ஹபிபுல்லா (வயது28) என தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.