இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்ட முதல் தென்னிந்திய நடிகை!

Rashmika Mandanna Instagram
By Thahir Aug 09, 2021 11:15 AM GMT
Report

இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை தொட்ட முதல் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. 

இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்ட முதல் தென்னிந்திய நடிகை! | Instagram Rashmika Mandanna

தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவரது நடிப்பில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ வெளியாகவிருக்கிறது. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் இந்தியா முழுக்க கவனம் ஈர்த்தார் ராஷ்மிகா. இளம் தலைமுறையினருக்கு தனது க்யூட் எக்ஸ்பிரஷன்களால் பிடித்த நடிகையாக இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை கொண்ட முதல் தென்னிந்திய நடிகை! | Instagram Rashmika Mandanna

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை தொட்ட முதல் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ராஷ்மிகா. கடந்த மாதம் 19 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டிருந்த ராஷ்மிகா ஒரே மாதத்தில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை தற்போது தொட்டிருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக, காஜல் அகர்வால் 19 மில்லியன் 20 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களையும், சமந்தா 18 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும், ரகுல் ப்ரீத் சிங் 17 மில்லியன் 30 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களையும், ஸ்ருதிஹாசன் 17 மில்லியன் 20 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களையும் அடுத்தடுத்து கொண்டுள்ளனர். கீர்த்தி சுரேஷ் 10 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைத் தொடவிருக்கிறார்.