இன்ஸ்டாகிராமில் முளைத்த காதல்...அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டும் காதலன்
இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபருடன் இரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மதம் மாற்ற முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மிரட்டல் விடுப்பதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார் அளித்துள்ள சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்பவரும், கரூரை சேர்ந்த பவித்ரா (21) என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கி இரண்டு மாதங்கள் வாழ்ந்த நிலையில் பவித்ராவை மதம் மாற்ற இமான் வற்புறுத்தி வந்ததாகவும், மது அருந்திவிட்டு தன்னை வற்புறுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் தனது மதத்திற்கு மாற வேண்டும் என மிரட்டி ஒன்றாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வரும் இமான் ஹமீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் பவித்ரா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் அதில் இமான் ஹமீப் குடித்து விட்டு வந்து என்னை மதம் மாறச் சொல்லி, தொழுகை செய்யச் சொல்லி அதிகம் டார்ச்சர் செய்தார். எனது சாதியை குறிப்பிட்டு என்னை கெட்ட வார்த்தையில் பேசி இழிவு படுத்திக் கொண்டே இருந்தார் என பவித்ரா தெரிவித்துள்ளார்.