இன்ஸ்டாகிரம் கிட்ஸ் செயலி உருவாக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு

Thahir
in தொழில்நுட்பம்Report this article
இளம் பயனாளர்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகளால் சிறாருக்கான இன்ஸ்டாகிரம் கிட்ஸ் என்ற செயலியை உருவாக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்துள்ள்து.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மோசெரி இந்த தாமதம் பெற்றோர், நிபுணர்கள், சட்டம் இயற்றுவோர் உள்ளிட்டோருடன் பேசி அவர்களது கவலைகளை கேட்டறியவும்,
இன்ஸ்டாகிரம் கிட்ஸ் திட்டத்தின் பயன்கள் குறித்து அவர்களுக்கு விளக்கவும் பயன்படும் என கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும்
சில வளர் இளம் பருவப் பெண்களுக்கு மன நல பிரச்னைகள் ஏற்பட்டதாக வெளியான தகவல்களை அடுத்து இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி உருவாக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த செயலி உருவாக்கப்படும் என பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் கடந்த மார்ச் மாதம் அறிவித்தபோதே எதிர்ப்புகள் எழுந்தன. இந்த திட்டத்தை நிரந்தரமாக கைவிடவேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.